உடன்குடியில், தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கு:பேரூராட்சி முன்னாள் தலைவிக்குஉதவிய 2 பேர் அதிரடி கைது


உடன்குடியில், தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கு:பேரூராட்சி முன்னாள் தலைவிக்குஉதவிய 2 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில், தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பேரூராட்சி முன்னாள் தலைவிக்கு உதவிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை வழக்கில் தலைமறைவான முன்னாள் பேரூராட்சி தலைவி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய 2 பேருக்கு பண உதவி செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் தலைவி தலைமறைவு

உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்தவர் சுடலை மாடன் (வயது 56). இவரை அவதூறாக பேசியதாக விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவி ஆயிஷாகல்லாசி, செயல் அலுவலர் பாபு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். அந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உதவிய 2 பேர் கைது

இந்த நிலையில் உடன்குடி தாண்டவன்காடு ரோடு ஞானராஜ் மகன் ஜெபசிங், முத்தையாபுரத்தை சேர்ந்த முகமது மகன் செய்யதுசிராசுதீன் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ள அந்த 2 பேருக்கும் ஏ.டி.எம். மூலம் பணம் கொடுத்து உதவியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவண பாலாஜி உத்தரவின் பேரில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் அடங்கிய தனிப்படையினர் ஜெபசிங், செய்யது சிராசுதீன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story