குளித்தலை பகுதியில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,150 பேர் மீது வழக்கு


குளித்தலை பகுதியில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,150 பேர் மீது வழக்கு
x

குளித்தலை பகுதியில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கரூர்

வாகன சோதனை

கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் செய்த வாகன சோதனையில் லாரியில் அதிகபாரம் ஏற்றிவந்தது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, தலைகவசம் அணியாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது.

1,150 பேர் மீது வழக்கு

உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 1,150 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ரூ.14 லட்சத்து 2 ஆயிரம் அபராதம் குளித்தலை போக்குவரத்து போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story