பெட்டிக்கடையில் புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு


பெட்டிக்கடையில் புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு
x

பெட்டிக்கடையில் புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ஊரம்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் முருகன் என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் சோதனை நடத்திய போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடையில் பதுக்கி வைத்திருந்த 45 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுபோல் அதே பகுதியில் சுஜின் குமார் (39) என்பவரது பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 48 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story