போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்கு


போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் சம்பவத்தன்று போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் ஹெல்மெட் அணியாமல் வந்தது குறித்து கேட்டபோது 2 பேரும் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை கண்டித்த போலீசார் 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் அபராதம் விதிக்கப்பட்ட 2 பேரும் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இதுகுறித்து போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாஹங்கிர் நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட ஈத்தாமொழி பெரியகாடு தெற்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியம் (வயது 40), பெருவிளை பள்ளவிளை விநாயகர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (38) ஆகிய 2 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story