குடிபோதையில் தகராறு செய்த 3 பேர் மீது வழக்கு


குடிபோதையில் தகராறு செய்த 3 பேர் மீது வழக்கு
x

குடிபோதையில் தகராறு செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 34). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு குடிநீர் தொட்டி இயக்கும் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த வடிவேல் (26), கருப்புசாமி (21), சங்கர் (25) ஆகியோர் குடிநீர் தொட்டியின் மேலே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த ராமராஜ் அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் குடிபோதையில் ராமராஜிடம் தகராறில் ஈடுபட்டு தகாதவார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வடிவேல், கருப்புசாமி, சங்கர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story