சீட்டு பணம் கேட்டு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு


சீட்டு பணம் கேட்டு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு
x

சீட்டு பணம் கேட்டு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் ஜாண்பால் தெருவை சேர்ந்தவர் வில்பிரட். இவருடைய மனைவி மகேஸ்மேரி (வயது 53). இவர் அதே பகுதியை சேர்ந்த தீபா என்பவரிடம் இருந்து சீட்டுக்கு பணம் வாங்கியிருந்தார். அதை மகேஸ்மேரி திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று தீபா மற்றும் அவரது கணவர் அந்தோணிபிச்சை ஆகியோர் மகேஸ்மேரியின் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மகேஸ்மேரி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தீபா மற்றும் அவரது கணவர் அந்தோணிபிச்சை ஆகிய 2 பேர் மீது மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-----


Next Story