மது போதையில் பஸ்சை ஓட்டிய டிரைவர் மீது வழக்கு
மது போதையில் பஸ்சை ஓட்டிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சி மாநகரில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் மதுபோதையில் வாகனங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன. இதை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபாகரன், அருண்குமார், முகமதுமீரான், செந்தில் மற்றும் போக்குவரத்து போலீசார் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை போதையில் உள்ளதை கண்டறியும் கருவி மூலம் சோதனையிட்டனர். இதில் தனியார் பஸ் டிரைவர் ஒருவர் மதுபோதையில் பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பஸ் டிரவைர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மொத்தம் 32 பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
Related Tags :
Next Story