காதலியுடன் நெருக்கமாக இருந்த படங்களை கணவருக்கு அனுப்பி மிரட்டியவர் மீது வழக்கு


காதலியுடன் நெருக்கமாக இருந்த படங்களை கணவருக்கு அனுப்பி மிரட்டியவர் மீது வழக்கு
x

காதலியுடன் நெருக்கமாக இருந்த படங்களை கணவருக்கு அனுப்பி மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மதுரை


புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மதுரை கூடல்புதூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளார். மேலும், திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் நெருக்கமாக இருந்ததை, செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அதன் பின்பும் உல்லாசமாக இருக்க அந்த பெண்ணை கார்த்திகேயன் அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவரது காதலி மறுத்துள்ளார். இதனால் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை காட்டி காதலியை மிரட்டி உள்ளார். மேலும் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவருக்கும் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story