ஏரியில் அனுமதி இன்றி வண்டல் மண் எடுத்தவர் மீது வழக்கு
ஏரியில் அனுமதி இன்றி வண்டல் மண் எடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் நேற்று மாலை தனது உதவியாளருடன் காரைக்குறிச்சி கோவை தட்டை ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோவை தட்டை ஏரியில் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறாமல் காரைக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் ரகுநாத்(வயது 21) தனது டிராக்டரில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு வந்தார். அவரை தடுத்து விசாரித்தபோது, வண்டல் மண்ணோடு டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து வண்டல் மண் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தார். மேலும் தப்பியோடிய ரகுநாத்தை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story