ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர் மீது வழக்கு
ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
ஆய்வு
ஆவுடையார்கோவில் தாலுகா அமரடக்கி ரேஷன் கடையில் ஆவுடையார்கோவில் கூட்டுறவு சார்பதிவாளர் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு விற்பனையாளர் குழந்தைசாமி என்பவர் பணியில் இருந்தபோது இருப்பில் இருக்க வேண்டிய பொது வினியோக திட்ட பொருட்களான பச்சரிசி 256 கிலோ, சர்க்கரை 67 கிலோ, கோதுமை 288 கிலோ, துவரம் பருப்பு 53 கிலோ, பாமாயில் 37 கிலோ இருப்பு குறைவாக இருந்துள்ளது.
வழக்குப்பதிவு
இந்த முறைகேட்டில் அங்கு பணிபுரிந்த விற்பனையாளர் குழந்தைசாமி ஈடுபட்டது தெரியவந்தது. அவர் மீது புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீசாரிடம் கூட்டுறவு துறை துணை பதிவாளர் கோபால் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைசாமியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story