பெட்டிக் கடையில் மது அருந்துவதற்கு அனுமதி கொடுத்த பெண் மீது வழக்கு


பெட்டிக் கடையில் மது அருந்துவதற்கு அனுமதி கொடுத்த பெண் மீது வழக்கு
x

பெட்டிக் கடையில் மது அருந்துவதற்கு அனுமதி கொடுத்த பெண் மீது வழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கைக்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்ன பொன்னேரி பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரது மனைவி கீதா (வயது 38) என்பவர் நடத்திவரும் பெட்டிக் கடையில் சோதனை செய்தனர்.

அப்போது பெட்டிக் கடையில் மது அருந்துவதற்கு அனுமதி கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கீதாவை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி, மது குடிப்பதற்கு அனுமதி வழங்கியதாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story