கிணற்றில் விழுந்த பூனை உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த பூனை உயிருடன் மீட்கப்பட்டது.
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் அவ்வையார் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் ராஜ். விவசாயி. இவருடைய தோட்டத்தில் 80 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் 40 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த கிணற்றில் வெங்கடேஷ் ராஜின் பூனை விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதை கண்டதும் அவர் பூனையை மீட்க முயன்றார். ஆனால் முடியவில்லை. உடனே அவர் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கயிற்றை கட்டி கிணற்றுக்குள் இறங்கி பூனையை உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story