ரோட்டில் கிடந்த செல்போனைபோலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்கள்


ரோட்டில் கிடந்த செல்போனைபோலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்கள்
x

மாணவர்கள்

ஈரோடு

சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் முகமது சன்ஷிப்ஹர் (வயது 10), சையது ரிபைய் (10), ஹாதிம்முகாஷ்ஷா (11). நண்பர்களான இவர்கள் 3 பேரும் சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகே உள்ள ரோட்டில் சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது ரோட்டில் செல்போன் கிடப்பதை பார்த்துள்ளனர். உடனே அதனை எடுத்துக்கொண்டு சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் ரோட்டில் கிடந்ததாக கூறி செல்போனை கொடுத்து, இதனை உரியவரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்கள்.

உடனே இன்ஸ்பெக்டர் முருகேசன், மாணவர்களின் நேர்மையையும், அவர்களுடைய செயல்பாட்டையும் பாராட்டி அவர்களுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தார்.


Next Story