பேராசிரியர்கள்-மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி


பேராசிரியர்கள்-மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி
x

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர்கள்-மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி நடந்தது

திருவாரூர்


திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர்கள்-மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி நடந்தது.

செஸ் போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியை பொதுமக்கள் அறிந்து கொள்ள மாவட்ட அளவில் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு இடையே செஸ் போட்டி நடந்தது.

200 பேர் பங்கேற்பு

நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன், நிலைய மருத்துவ அலுவலர் ராமசந்திரன், டாக்டர்கள் ஜின்ரீவ் டேனியல், மதன்குமார், பரமேஸ்வரி,கவுதம், சக்கரவர்த்தி, தினேஷ் உள்பட 29 பேராசிரியர்கள், 200 மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு செஸ் விளையாடினர்.

மாணவர்களுக்கு செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மாணவர்களிடையே தனித்திறமை வெளி கொண்டு வரும் விதமாகவும் இந்த போட்டி நடத்தப்பட்டது.


Next Story