காதலித்து மணந்த ஜப்பான் பெண்ணுடன் சொந்த ஊருக்கு வந்த சீன நிறுவன ஊழியர்
காதலித்து மணந்த ஜப்பான் பெண்ணுடன் சீன நிறுவன ஊழியர் தனது சொந்த ஊரான கோபிக்கு வந்தார். அப்போது அவர் தான் படித்த பள்ளிக்கூடத்தை மனைவியுடன் சென்று பார்வையிட்டார்.
கடத்தூர்
காதலித்து மணந்த ஜப்பான் பெண்ணுடன் சீன நிறுவன ஊழியர் தனது சொந்த ஊரான கோபிக்கு வந்தார். அப்போது அவர் தான் படித்த பள்ளிக்கூடத்தை மனைவியுடன் சென்று பார்வையிட்டார்.
கடத்தூர்
காதலித்து மணந்த ஜப்பான் பெண்ணுடன் சீன நிறுவன ஊழியர் தனது சொந்த ஊரான கோபிக்கு வந்தார். அப்போது அவர் தான் படித்த பள்ளிக்கூடத்தை மனைவியுடன் சென்று பார்வையிட்டார்.
இந்த ருசிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சீனாவில் மலர்ந்த காதல்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபிபாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி. விவசாயி. இவருடைய மனைவி சரசாயாள். இவர்களுடைய மகன் பண்டரிநாதன் (வயது 36). எம்.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு கதை, கட்டுரை எழுதும் ஆர்வம் இருந்ததால் கடந்த 2014-ம் ஆண்டு சீனாவில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தில் தமிழ் பிரிவில் வேலைக்கு சேர்ந்தார்.
அதே ஊடகத்தில் ஜப்பானை சேர்ந்த சியேகோ பாயாஷி (32) என்ற பெண் ஜப்பானிய மொழி பிரிவில் நாடகத்துறையில் வேைலக்கு சேர்ந்தார். ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்து முறைப்படி திருமணம்
இதையடுத்து பண்டரிநாதன் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பெற்றோரை சீனாவுக்கு வரவழைத்தார். அதேபோல் சியேகோ பாயாஷியும் தன்னுடைய பெற்றோரை அங்கு வரவழைத்தார். பின்னர் தாங்கள் தங்கியுள்ள கட்டிடத்திலேயே விநாயகர் சிலை அமைத்து இந்து முறைப்படி தாலி கட்டி பண்டரிநாதன், சியேகோ பாயாஷியை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்ததும் பண்டரிநாதன் மனைவியுடன் சொந்த ஊரான கோபிபாளையத்துக்கு வர விரும்பினார். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு கோபி பாளையத்துக்கு வந்தனர். கோபியில் உள்ள பல்வேறு இடங்களை சியேகோ பாயாஷிக்கு பண்டரிநாதன் சுற்றி காண்பித்தார்.
நடித்து காட்டினார்
இந்தநிலையில் நேற்று பண்டரிநாதன் தான் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்த கோபி தூய திரேசாள் அரசு நிதி உதவி பெறும் தொடக்க பள்ளிக்கு மனைவியை அழைத்து சென்று நெகிழ்ச்சி அடைந்தார்.
பள்ளிக்கூடத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சியேகோ பாயாஷி சீன மொழியில் பள்ளிக்குழந்தைகளுடன் பேசினார். அதை பண்டரிநாதன் தமிழில் மொழி பெயர்த்தார். பின்னர் பண்டரிநாதன் தமிழில் கூறிய சிறுகதையை சியேகோ பாயாஷி ஜப்பான் மொழியில் பல குரலில் பேசி நடித்து காட்டினார். மாணவ-மாணவிகள் அதை கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டினர்.
இதையடுத்து பண்டரிநாதன் தம்பதி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை பள்ளிக்கு இலவசமாக வழங்கினர்.