இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்: லாட்ஜிக்கு வரவழைத்து 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்


இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்: லாட்ஜிக்கு வரவழைத்து 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்
x

இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் லாட்ஜிக்கு வரவழைத்து 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கிருஷ்ணகிரி வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

குளச்சல்:

இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் லாட்ஜிக்கு வரவழைத்து 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கிருஷ்ணகிரி வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பழக்கம்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு, கிருஷ்ணகிரியை சேர்ந்த நாகேஷ் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தியது. பிறகு செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டதில் நெருக்கம் அதிகமானது. வாலிபர் இனிக்க, இனிக்க பேசி மாணவியை வசீகரம் செய்தார்.

மாணவி பலாத்காரம்

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போனார். மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்த அவர் சோர்வுடன் காணப்பட்டார்.

இதனை பார்த்த அவருடைய தாய் பதற்றமடைந்து மாணவியிடம் கேட்டார். அதற்கு, இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான கிருஷ்ணகிரியை சேர்ந்த வாலிபர் நாகேஷ் இரவு வீட்டருகே வந்து அழைத்ததாகவும், அவர் களியக்காவிளையில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்துச் சென்று தன்னை பலாத்காரம் செய்ததாகவும், காலையில் வீட்டருகே வந்து விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

போலீசில் புகார்

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து நாகேஷை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story