பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் விருந்தினர் மாளிகை


பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் விருந்தினர் மாளிகை
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகாரில் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் விருந்தினர் மாளிகையை சீரமைத்து மீண்டும் திறக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகாரில் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் விருந்தினர் மாளிகையை சீரமைத்து மீண்டும் திறக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

விருந்தினர் மாளிகை

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் சரித்திர புகழ் பெற்ற சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளது. சிலப்பதிகார கலைக்கூடம், நெடுங்கல்மன்றம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம் மற்றும் கடற்கரையை பார்ப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

பூம்புகாருக்கு வருகை தரும் விருந்தினர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக விருந்தினர் மாளிகை, 1974-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

பராமரிப்பின்றி மூடிக்கிடக்கிறது

இந்த விருந்தினர் மாளிகை பொதுப்பணி துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருந்தினர் மாளிகை முறையாக பராமரிக்கப்படாததால் கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில்:-பூம்புகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் கடற்கரையையொட்டி அமைந்துள்ள இந்த விடுதியில் தங்குவது வழக்கம். ஆனால் தற்பொழுது விடுதி முழுவதும் சேதமடைந்து மூடப்பட்டுள்ளது.

மீண்டும் திறக்க வேண்டும்

விருந்தினர் மாளிகை பராமரிப்பின்றி மூடப்பட்டதால் பூம்புகார் வரும் சுற்றுலா பயணிகள் சீர்காழி மற்றும் திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் தங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள விருந்தினர் மாளிகையை சீரமைத்து விரைவில் திறக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story