கொடைக்கானலில் தரை இறங்கிய மேககூட்டம்


கொடைக்கானலில் தரை இறங்கிய மேககூட்டம்
x

கொடைக்கானலில் தரை இறங்கிய மேக கூட்டத்தினால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன.

திண்டுக்கல்

கொடைக்கானல் பகுதியில், கடந்த 2 நாட்களாக அடர்ந்த மேகமூட்டம் ஆக்கிரமித்து இருக்கிறது. அதன்படி வழக்கம் போல நேற்று அதிகாலை முதலே மேக கூட்டம் தரையிறங்கியது. மேலும் காலை 10 மணி முதல் இரவு வரை மிதமான மழையும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. மழை, அடர்ந்த மேகமூட்டம் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பகலில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

அடர்ந்த மேககூட்டம் தரை இறங்கி, சாலை தெரியாத அளவுக்கு படர்ந்திருந்ததால் வாகன ஓட்டிகள் தள்ளாடினர். இதனால் பகலிலேயே முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்கினர். இதேபோல் சுற்றுலா இடங்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுமட்டுமின்றி நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இரவிலும் மின்தடை தொடர்ந்ததால், நகரின் பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story