அரசு பள்ளி அலுவலகத்தில் புகுந்த நாக பாம்பு


அரசு பள்ளி அலுவலகத்தில் புகுந்த நாக பாம்பு
x

அரசு பள்ளி அலுவலகத்தில் புகுந்த நாக பாம்பு புகுந்ததால் ஆசிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை ஆசிரியர்கள் வழக்கம்போல அலுவலக அறையில் கையெழுத்திட சென்றனர், அப்போது அங்கு ஒரு மூலையில் பாம்பு தோல் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் தயங்கி நின்றனர். உடனடியாக தலைமை ஆசிரியர் சா.இளங்கோவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரும், ஆசிரியர்கள் சி.ரவிவர்மன், முருகேசன், பெருமாள், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் அலுவலக அறையில் தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு இருந்த பீரோவின் அடியில் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருந்தது. இதனை கண்டு ஆசிரியர்களும் அனைவரும் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை கண்ட பள்ளி மாணவர்களும் அங்கு கூடினர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியது.


Next Story