வீட்டில் பதுங்கிய நாகப்பாம்பு பிடிபட்டது


வீட்டில் பதுங்கிய நாகப்பாம்பு பிடிபட்டது
x

வாணியம்பாடியில் வீட்டில் பதுங்கிய நாகப்பாம்பு பிடிபட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி சென்னம்பேட்டை பகுதி தக்கடி தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதை பார்த்ததும் வீட்டில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

இதனைத் தொடர்ந்து பாம்பு பிடிக்கும் இளைஞர் கபீல் என்பவரை வரவழைத்து வீட்டிற்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பை பத்திரமாக பிடித்து அருகில் உள்ள ஆற்றுப்பகுதியில் விட்டனர்.


Next Story