விழுப்புரம் அருகேமதுபாட்டிலுக்குள் கிடந்த கரப்பான் பூச்சிமதுப்பிரியர்கள் அதிர்ச்சி


விழுப்புரம் அருகேமதுபாட்டிலுக்குள் கிடந்த கரப்பான் பூச்சிமதுப்பிரியர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே மதுபாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடை கடந்த சில மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், மதுபானம் வாங்க சென்றுள்ளனர்.

அங்கு அந்த இளைஞர்கள் தாங்கள் விரும்பிய மதுபான வகைகளை வாங்கினர். அப்போது சீல் பிரிக்கப்படாத மதுபாட்டில் ஒன்றின் உள்ளே கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த மதுபாட்டிலை எடுத்துச்சென்று கடையின் விற்பனையாளர்களிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் செவிசாய்க்காமலும், மாற்று மதுபாட்டிலை வழங்காமலும் அடுத்தடுத்து வரிசையில் நின்ற மதுப்பிரியர்களுக்கு மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

கரப்பான் பூச்சி செத்துக்கிடந்த மதுபாட்டிலுக்கு பதிலாக வேறொரு மதுபாட்டிலை வழங்காததால் தங்கள் பணம் விரயமானதோடு விரும்பிய மதுபானத்தையும் அருந்த முடியாமல் அந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதனால் அவர்கள் கரப்பான் பூச்சி விழுந்து கிடந்த அந்த மதுபாட்டிலை தங்கள் செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த மதுப்பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தமிழக அரசு, உடனடியாக கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுபானத்தில் கரப்பான் பூச்சி விழுந்து கிடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story