பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம்


பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம்
x
தினத்தந்தி 6 April 2023 12:30 AM IST (Updated: 6 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

போடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு பக்தர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.

தேனி

போடியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று முன்தினம் மாலை பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் திருக்கல்யாண பூஜையில் கும்பத்தின் மீது வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் தொடக்க விலையாக ரூ.3 ஆயிரத்து ஒன்று என்று அறிவிக்கப்பட்டது. ஏலத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் ஒவ்வொருவராக தொகையை அதிகரித்து கொண்டே சென்றனர். மிகவும் விறுவிறுப்பாக ஏலம் நடந்தது. முடிவில், தேனியை சேர்ந்த டாக்டர் உடையப்பன் என்பவர் அந்த தேங்காயை ரூ.30 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்தார்.

இதுகுறித்து பக்தர்களிடம் கேட்டபோது, பூஜையில் வைக்கப்பட்ட தேங்காயை வீட்டில் பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்றனர்.


Next Story