அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பரிதாப சாவு மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.
ஆரணி
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.
ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. களம்பூர் பகுதியிலும் பலத்த மழை கொட்டியது. ஏரிக்குப்பம் கன மழையின் காரணமாக மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. அப்போது கோபாலகிருஷ்ணன் (வயது 80) என்பவர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது மின்வயர் அறுந்து கிடந்ததை கவனிக்கவில்லை.
இந்த நிலையில்அவர் மின்கம்பியை மிதித்து விட்டார். இதனால் அதில் கசிந்த மின்சாரம் உடலில் பாய்ந்ததில் கோபாலகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டார். இவரது மனைவி 30 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இதனால் அவர் மகள் சாரதா பராமரிப்பிலேயே இருந்து வந்துள்ளார். கோபாலகிருஷ்ணன் இறந்தது குறித்து களம்பூர் போலீஸ் நிலையத்தில் சாரதா புகார் அளித்தார். அதன்பேரில் களம்பூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் அப்துல் கான் என்பவருடைய வீட்டின் அருகே இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கியது. இதனால் மரம் தீப்பற்றி எரிந்தது. ஆரணியில் நேற்று காலை 8 மணி வரை 47.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்ததாக தாசில்தார் ஆர்.ஜெகதீசன் தெரிவித்தார்.