அங்கன்வாடி மையத்தின் மீது தென்னை மரம் விழுந்தது


அங்கன்வாடி மையத்தின் மீது தென்னை மரம்  விழுந்தது
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் அங்கன்வாடி மையத்தின் மீது தென்னை மரம் விழுந்தது.

திருவாரூர்

திருவாரூர் நகர் மடப்புரம் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்தில் நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்துள்ளது. அப்போது அங்கன்வாடி மையம் அருகில் சாலையோரத்தில் இருந்த தென்னை மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்ததில் அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற காரின் மீது விழுந்தது. மேலும் அங்கன்வாடி கட்டிடத்தின் பக்கவாட்டு இரும்பு கூரை மீதும் விழுந்தது. தென்னை மரம் சாய்ந்து விழுவதை அறிந்த ஆசிரியர்கள் அலறி அடித்து குழந்தைகளை தூக்கி கொண்டு அங்கன்வாடி மையத்தை விட்டு வெளியே ஓடினர். மேலும் அங்கு உள்ள அக்கம் பக்கத்தினரும் குழந்தைகளை மீட்டனர். உடனடியாக மின்வாரியத்துறை மற்றும் பொதுப்பணி துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் அங்கன்வாடி மையத்தின் கூரை சேதமடைந்தது. காரும் லேசாக சேதமடைந்தது. இந்த விபத்தில் அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகளும், காரில் சென்றவர்களும் எவ்வித காயமும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story