வீரர்-வீராங்கனைக்கு கலெக்டர் பாராட்டு
உலக கோப்பை ரோல்பால் போட்டிக்கு தேர்வான வீரர்-வீராங்கனையை கலெக்டர் பாராட்டினார்.
திண்டுக்கல்
6-வது உலகக்கோப்பை ரோல்பால் போட்டி, வருகிற 21-ந்தேதி முதல் 26 -ந்தேதி வரை மராட்டிய மாநிலம் பூனேவில் நடக்கிறது. இதில் இந்திய அணி சார்பில், திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கத்தை சேர்ந்த மாணவர் பிரதீப் மற்றும் மாணவி சுஷ்மிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணிக்காக ரோல்பால் போட்டியில் பங்கேற்கும், திண்டுக்கல் வீரர்-வீராங்கனைக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் வருவாய் அலுவலர் லதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமாமேரி ஆகியோரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இதில் முதன்மை பயிற்சியாளர் எம்.பிரேம்நாத், ரோல்பால் சங்க தென்னிந்திய செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் மாநில செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story