வேன் டிரைவரை கரம் பிடித்த கல்லூரி மாணவி
வடமதுரை அருகே வேன் டிரைவரை கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்துெகாண்டு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
திண்டுக்கல்
வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்தவர் சூர்யா. வேன் டிரைவர். தென்னம்பட்டியை சேர்ந்தவர் வினோதினி . இவர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story