கடலூர் முதுநகரில் பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவர் - போலீசார் விசாரணை
கடலூர் முதுநகரில் பிளஸ்-1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கும் கடலூரை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இதையடுத்து மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், அந்த மாணவர் சென்று மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் அந்த மாணவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மாணவியை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது 18 வயது பூர்த்தியாகாத சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த டாக்டர்கள், கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி கொடுத்த புகாரின் பேரில், அந்த மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.