தனியார் விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தனியார் விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருகம்பாக்கம்,
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரஒபுல் (வயது 21). இவர், சென்னை விருகம்பாக்கம், நியூ காலனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, மதுரவாயலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இவருடன் அதே விடுதியில் தங்கியுள்ள அவரது நண்பருக்கு பிறந்தநாள். இதனால் விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
தூக்குப்போட்டு தற்கொலை
ஆனால் சந்திரஓபுல் மட்டும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாமல் அவரது அறையில் இருந்து கொண்டார். இதனால் அவரது நண்பர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு சந்திரஒபுல், தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், தற்கொலை செய்த சந்திரஒபுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.