கரடி விரட்டியதால் பரபரப்பு
கரடி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மகாத்மா காந்தி காலனி பழைய சுடலை கோவில் அருகே வசித்து வருபவர் முத்துக்குமார் (வயது 54). மில் தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டினரின் நாய்க்குட்டியை காணவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் மனைவி சுப்புலெட்சுமி மற்றும் பக்கத்து வீட்டு பெண்கள் இருவர் சேர்ந்து தேடினர். அப்போது அவர்களுக்கு அருகில் பெரிய கரடி நின்றுள்ளது. அது இவர்களை கண்டதும் ஆக்ரோஷமாக துரத்தியுள்ளது. உடனே இவர்கள் ஓடி வந்து வீட்டிற்குள் சென்று கதவை பூட்டினர். தொடர்ந்து கரடியானது கோட்டைவிளைபட்டி ரோட்டில் சென்று விட்டது.
Related Tags :
Next Story