எழில்மிகு நீர்நிலைகளை படம் பிடித்து அனுப்பும் போட்டி; கலெக்டர் தகவல்
உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு எழில்மிகு நீர்நிலைகளை படம் பிடித்து அனுப்பும் போட்டி நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் எழில்மிகு காட்சிகளை படம் பிடித்து அனுப்பும் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் நெல்லை மாவட்டத்தில் உள்ள எழில்மிகு நீர்நிலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களை புகைப்படம் (12-க்கு 8 என்ற அளவில்) எடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் வந்து கொடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் 3 சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகளும், சிறந்த 25 புகைப்படங்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story