வீட்டின் மேலே இருந்து கீழே விழுந்து கட்டிட தொழிலாளி பலி


வீட்டின் மேலே இருந்து கீழே விழுந்து கட்டிட தொழிலாளி பலி
x

தூசி அருகே வீட்டின் மேலே இருந்து கீழே விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

தூசி, டிச.10-

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே மாமண்டூர் தருமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35),கட்டிட தொழிலாளி.

இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் வீட்டின் மேலே ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது கால் தவறி மேலே இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணிகண்டனின் தந்தை சுந்தரம் தூசி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story