தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளி
மேக்காமண்டம் அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளியின் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்:
மேக்காமண்டம் அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த கட்டிட தொழிலாளியின் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கட்டிட தொழிலாளி
திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் தெற்கு கைலாசவிளை பகுதியை சேர்ந்தவர் சித்திரை (வயது67), தேங்காய் நார் உரிக்கும் தொழிலாளி. இவருக்கு சிங்(33), ராஜகுமார் என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதில் சிங் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த 10 நாட்களாக வீட்டில் அதிக சத்தம் போட்டு அரைகுறை ஆடையுடன் சுற்றி வந்துள்ளார்.
அழுகிய நிலையில் பிணம்
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல.
நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் சிங் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் சித்திரைக்கு தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தபோது அரைகுறை ஆடையுடன் அழுகிய நிலையில் சிங் கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசார் விசாரணை
பின்னர் இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து சிங் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.