பழைய பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
பழைய பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் பழைய பஸ் நிலையம் மேம்படுத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் பார்த்தசாரதி, வட்டாட்சியர் சீனிவாசன், பொறியாளர் ராமலிங்கம், துணைத் தலைவர் கல்பனா குழந்தைவேல் மற்றும் பழைய பஸ் நிலைய கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், பழைய பஸ் நிலையத்தை இடித்து மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், தயார் செய்யப்பட்ட வடிவமைப்பை பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் கூறும்போது, பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிகள் நடக்கும்போது, அனைத்து பஸ்களும் தென்காசி ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் போக்குவரத்து அலுவலர்களின் கருத்துகளை கேட்டு நடைமுறைப்படுத்தப்படும். மீன் கடைகளை அப்புறப்படுத்தி அதற்கான கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.