நுகர்வோர் விழிப்புணர்வு அரங்கம் அமைக்க வேண்டும்


நுகர்வோர் விழிப்புணர்வு அரங்கம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு அரங்கம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். பொருளாளர் மரியம்மா, இணை செயலாளர் வினோபா பாப், ஆலோசகர் பிரவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோத்தகிரியில் அடுத்த மாதம் நடைபெறும் காய்கறி கண்காட்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு அரங்கம் அமைக்க வேண்டும். கோத்தகிரி பகுதியில் சாலையோரங்களில் விற்கப்படும் பதநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கோத்தகிரி பகுதியில் சாலையில் போடப்பட்ட வேகத்தடைகளை, இரவில் தெரிந்துகொள்ள வசதியாக ஒளிரும் பட்டை பொருத்த வேண்டும். கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் விநாயகர் கோவில் முதல் டானிங்டன் வரை செல்லும் நீரோடையில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும். கோத்தகிரி மார்க்கெட் முதல் நேரு பூங்கா வரை பழுதடைந்த நடைபாதையை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முகமது இஸ்மாயில், திரைசா, லலிதா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் நன்றி கூறினார்.


Next Story