நடுரோட்டில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி


நடுரோட்டில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
x

ஒட்டன்சத்திரம் அருகே, நடுரோட்டில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

தூத்துக்குடியில் இருந்து திருப்பூருக்கு துணிகள் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாரியை, தூத்துக்குடியை சேர்ந்த சாமுவேல் (வயது 23) ஓட்டினார். ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் கொசவபட்டி பிரிவில் லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடு ரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் சாமுவேல் மற்றும் அவருடன் வந்த ஜான் (23) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து காரணமாக ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கிரேன் மூலம் கன்டெய்னர் லாரி அங்கிருந்து நகர்த்தப்பட்டது. அதன்பிறகே போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story