முசிறி நகராட்சி கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்


முசிறி நகராட்சி கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்
x

முசிறி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்ட ார்.

திருச்சி

முசிறி நகராட்சி சாதாரண கூட்டம் அதன் தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் பழைய பஸ் நிலையத்தை அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பஸ் நிலையத்தை இடிக்க தீவிரம் காட்டுவது ஏன் என கவுன்சிலர் மரகதம் கேள்வி எழுப்பி கூட்ட அரங்கில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தலைவர், ஆணையர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கூட்ட அரங்கில் அவருக்கு ஒதுக்கிய இருக்கையில் அமர வைத்தனர். கூட்டத்தில் பழைய பஸ்நிலையத்தை இடிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதேபோல் அந்தந்த வார்டுகவுன்சிலர்கள் தங்கள் பகுதி குறைகள்குறித்து பேசினர். முடிவில் துணைத் தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.


Next Story