போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த தம்பதியரால் பரபரப்பு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு  மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த தம்பதியரால் பரபரப்பு
x

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த தம்பதியரால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று சிறுபாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் மண் எண்ணெய் பாட்டிலுடன் வந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி, அவர்களை ஆசுவாசப்படுத்தினர்.

தொடர்ந்து அவர்களிடம் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் சிறுபாக்கம் அரசுகுடி காலனி வடக்கு தெருவை சேர்ந்த கருப்பன், அவரது மனைவி கொடியம்மாள் (வயது 50) என்று தெரிந்தது.அவர்களையும், அவரது மருமகளையும் இடபிரச்சினை காரணமாக அதே ஊரை சேர்ந்த 6 பேர் ஆயுதங்களால் தாக்கி விட்டதாகவும், இது பற்றி சிறுபாக்கம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாவதை தவிர வேறு வழியில்லை என்று தற்கொலை முடிவுக்கு வந்ததாக தெரிவித்தனர்.

பரபரப்பு

இதை கேட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், இது பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை அனுப்பி வைத்தார். இருப்பினும் தம்பதியினர் மண்எண்ணெய் பாட்டிலுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story