கடையநல்லூரில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்; அமைச்சரிடம் மனு


கடையநல்லூரில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்; அமைச்சரிடம் மனு
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு கொடுத்தார்.

தென்காசி

கடையநல்லூர்:

சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சென்னை தலைமைச் செயலகத்தில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினார்.

அதில், தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூரில் மாஜிஸ்திரேட்டு மற்றும் உரிமையியல் நீதிமன்றமும், வீ.கே.புதூர் தாலுகாவில் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உரிமைகள் நீதிமன்றமும் அமைக்க வேண்டும். செங்கோட்டையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவியல் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் செங்கோட்டையில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். ஆலங்குளத்தில் உரிமையியல் நீதிமன்றமும், குற்றவியல் நீதிமன்றமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஏற்கனவே கட்டிடம் கட்டுவதற்கு கழுநீர்குளம் ஊராட்சியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் காசி தர்மத்துரை, தொழில் அதிபர் சண்முகவேல், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், சுரண்டை மகேந்திரன், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story