சாலையை விட உயரமான மூடியை சரி செய்ய வேண்டும்
சாலையை விட உயரமான மூடியை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகர பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் பைபர் கேபிள் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இதற்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து பள்ளத்தை மூட இரும்பு மூடி பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த மூடி சாலையை விட அதிக உயரத்தில் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஏறி இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் சின்னக்கடை பஜார் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதுபோல் அமைந்துள்ளனர். எனவே சாலையில் சமனுக்கு மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story