காளை விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி பலி


காளை விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி பலி
x

கலசபாக்கம் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காளை விடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், கீழ்பாலூர், கடலாடி உள்பட பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்று வருகின்றன.

விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து போலீஸ் கொடி அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் கீழ்பாலூர் கிராமத்தில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது.

இதில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாடு முட்டி தொழிலாளி பலி

கலசபாக்கம் அருகே குப்பம் கிராமம் பூங்காவனத்தம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 50), கூலித் தொழிலாளி.

இவர் கீழ்பாலூர் கிராமத்தில் காளை விடும் திருவிழாவை பார்க்க செல்வதாக மனைவி குமாரியிடம் கூறிவிட்டு வந்துள்ளார்.

அப்போது ஓரமாக நின்றிருந்த கார்த்தி மீது திடீரென காளை மாடு ஒன்று முட்டி மோதி தூக்கி வீசியது.

இதில் படுகாயம் அடைந்த கார்த்திகை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கடலாடி போலீசார் வழக்குபஙபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த கார்த்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story