மின்னல் தாக்கி பசுமாடு சாவு
மூலைக்கரைப்பட்டி அருகே மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, சிந்தாமணி, பருத்திப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மேல சிந்தாமணியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி முத்துலட்சுமி (வயது 37) என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மேற்கு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பசு மாடு பரிதாபமாக இறந்தது. இறந்த பசுமாட்டை சிந்தாமணி பஞ்சாயத்து தலைவர் ஜேசு மிக்கேல், கிராம நிர்வாக அலுவலர் சித்ரா, கிராம நிர்வாக உதவியாளர் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story