100 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு சாவு


100 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு சாவு
x
தினத்தந்தி 20 Aug 2023 2:30 AM IST (Updated: 20 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாபமாக இற்நதது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள ஏ.வி.பட்டி களத்துவீடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). விவசாயி. இவர், தனது தோட்டத்தில் 5 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் 100 அடி ஆழ கிணறு உள்ளது. தற்போது அந்த கிணறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த கிணற்றின் அருகே, முருகன் வளர்க்கும் பசுக்களில் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த பசுமாடு கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இல்லாததால் கிணற்றின் அடிப்பகுதியில் விழுந்து பசுமாடு காயமடைந்தது. இதனை பார்த்த முருகன், உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கிரேன் மூலம் பசுவை மீட்க முடிவு செய்தனர். அதன்படி கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் கிரேனில் கம்பி கட்டி அதன் மூலம் தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றுக்குள் இறங்கினர். இதற்கிடையே படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த பசுமாடு பரிதாபமாக இற்நதது. அதன் பின்னர் பசுமாட்டின் உடலை 4 மணி நேர போராட்டத்தக்கு பிறகு கயிறு கட்டி தீயணைப்பு படைவீரர்கள் மேலே கொண்டு வந்தனர். பின்னர் இறந்த பசுமாட்டின் உடல் முருகனின் தோட்டத்தில் புதைக்கப்பட்டது.


Next Story