கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடு .


கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடு .
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடு மீட்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி எல்லை மற்றும் மதுரை மாவட்ட நுழைவாயிலில் அமைந்துள்ளது மேல்மலைக்குடியிருப்பு. இப்பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் பயன்பாடு இல்லாத கழிவுநீர் தொட்டி ஒன்று உள்ளது. நேற்று மாலையில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான காளைமாடு ஒன்று இப்பகுதியில் சுற்றி திரிந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தவறி அங்கிருந்த கழிவுநீர் தொட்டிக்குள் காளைமாடு விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த கோவில் காளையை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டு மேலே கொண்டு வந்தனர்.


Next Story