கன்றுக்குட்டியை எடுத்து சென்றதால் வாகனத்தின் பின் ஓடிய பசு
கன்றுக்குட்டியை எடுத்து சென்றதால் 1 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தின் பின் பசு ஓடி சென்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சண்முகம் தெருவின் நடுவில் பசு மாடு ஒன்று கன்றை ஈன்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாட்டின் உரிமையாளர் அங்கு வந்து கன்று குட்டியை சரக்கு வாகனத்தில் கொண்டு சென்றார். இதைப் பார்த்த கன்றுக்குட்டியின் தாய் பசு வாகனத்தின் பின்னாடியே கன்றுக்குட்டியை நோக்கி ஓடி வந்து பாசப் போராட்டம் நடத்தியது.
கன்றை ஈன்ற சில மணித்துளிகளில் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் தன் கன்றுக்குட்டியை மாட்டின் உரிமையாளர் எடுத்துச்செல்லும் வாகனத்தின் பின்னாடியே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பசுமாடு ஓடி வந்தது காண்போரை நெகிழச்செய்தது.
Related Tags :
Next Story