கழிவு நீர் தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு


கழிவு நீர் தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
x

கழிவு நீர் தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

மதுரை

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே கழிவு நீர் தொட்டி உள்ளது. அவ்வழியே சென்ற பசுமாடு கழிவு நீர் தொட்டி உடைந்து உள்ளே விழுந்தது. பசு மாட்டின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராமமக்கள் ஒரு மணி நேரம் போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.


Related Tags :
Next Story