கிணற்றுக்குள் விழுந்த மாடு உயிருடன் மீட்பு


கிணற்றுக்குள் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
x

கிணற்றுக்குள் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

கரூர்

கரூர் வளையல்காரன்புதூர் பகுதியில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று அந்த வழியாக மேய்ச்சலுக்கு வந்த மாடு ஒன்று கிணற்றினுள் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மாட்டை உயிருடன் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story