கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் அருகே தளிஞ்சி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் தனது பசு மாட்டை அவரது வீ்ட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள தண்ணீர் நிறைந்த கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பசுமாடு தவறி விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.


Next Story