ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் பசுமாடு


ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் பசுமாடு
x
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இந்த பசுமாடு ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மனிதர்களுக்கு மனிதர் உதவி செய்ய மனம் இல்லாமல் உள்ள நிலையில் பசு ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்து தனக்கும் தாய் உள்ளம் உண்டு என்று நிரூபித்துள்ளது.

இதனை ஏராளமானவர்கள் வந்து பார்த்து செல்கின்றனர். மேலும் இதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.


Next Story