தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்தவரை முதலை கவ்வியது
தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்தவரை முதலை கவ்வியது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடித்தவரை முதலை கவ்வியது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மீன் பிடிக்க சென்றார்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி செங்கவல்லி. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
வெங்கடேசன் அவ்வப்போது அருகில் உள்ள தென் பெண்ணையாற்று பகுதிக்கு சென்று மீன்களை பிடித்து வந்து வியாபாரம் செய்வது வழக்கம்.
அதன்படி இன்று வழக்கம்போல் மீன் பிடிக்க வெங்கடேசன் தென்பெண்ணை யாற்றுக்கு வலையுடன் சென்றார். அங்கு ஆற்றில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.
முதலை கவ்வியது
அப்போது திடீரென அவரை முதலை ஒன்று கவ்வியது. இதனால் வெங்கடேசன் நிலைதடுமாறி விழுந்தார். அவரின் வயிற்றுப்பகுதியை முதலை கவ்வி ஆற்றுக்குள் இழுத் துச்செல்ல முயன்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர், உடனடியாக ஆற்றில் இறங்கி முதலையின் பிடியில் இருந்து வெங்கடேசனை விடுவித்தனர்.
பின்னர் படுகாயமடைந்த அடைந்த அவரை தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.