மாயாற்றங்கரையில் ஓய்வெடுத்த முதலை


மாயாற்றங்கரையில் ஓய்வெடுத்த முதலை
x
தினத்தந்தி 17 May 2023 5:00 AM IST (Updated: 17 May 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை மாயாற்றங்கரையில் முதலை படுத்து ஓய்வெடுத்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர்.

நீலகிரி

கூடலூர்

முதுமலை மாயாற்றங்கரையில் முதலை படுத்து ஓய்வெடுத்தது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர்.

புல்வெளியில் ஓய்வெடுத்த முதலை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அங்கு வாகன சவாரி சென்று வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

அவர்கள் வாகன சவாரி செய்து வனவிலங்குகளை கண்டு ரசித்து வருகிறார்கள். இருப்பினும் காட்டு யானைகள், மான்களை மட்டுமே அடிக்கடி பார்க்க முடிகிறது. மிக அபூர்வமாக தான் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகளை காண முடியும். பெரும்பாலான நேரங்களில் வனவிலங்குகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள்

இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக பாய்ந்தோடும் மாயாறு கரையில் முதலை ஒன்று ஆற்றில் இருந்து வெளியே வந்து புல்வெளியில் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தது. கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் மாயாறு கரையோர புல்வெளியில் முதலை படுத்து கிடப்பதை பார்த்தனர். தொடர்ந்து அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு நின்று முதலையை கண்டு வியப்படைந்தனர்.இதற்கிடையே முதலை ½ மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து ஓய்வு எடுத்து கொண்டிருந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையோரம் முதலையை பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. அப்போது அந்த வழியாக வந்த வன ஊழியர்கள், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் முதலை ஆற்றுக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story